Oct 31, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலில் பயா ரூம்புட் தொகுதியில் மும்முனைப் போட்டி - அன்வாரின் அரசியல் செயலாளர் களமிறங்குகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலில் பயா ரூம்புட் தொகுதியில் மும்முனைப் போட்டி - அன்வாரின் அரசியல் செயலாளர் களமிறங்குகிறார்

நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், பாயா ரூம்புட் தொகுதியில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரும், பிகேஆர் கட்சியின் கூட்டரசுப் பிரதேசத் தலைவருமான அஸ்மான் அபிடின் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

தனது முதல் தேர்தலில் போட்டியிடும் அஸ்மான், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் ரஃபிஸி அஹ்மாட் மற்றும் பெர்சாமா கட்சியின் அப்துல் ரஷிட் அபு பாக்கார் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

பாயா ரூம்புட் தொகுதி பாரிசான் நேஷனல் கூட்டணியின் பாரம்பரிய ஆதரவுத் தொகுதியாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, பெர்சாத்து கட்சியின் மூலம் இத்தொகுதியைக் கைப்பற்றியது.

இத்தொகுதியில் 61 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 30 விழுக்காட்டினர் சீனர்கள், 6 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில், ஐந்து முனைப் போட்டியில் அம்னோவின் ராயிஸ் யாசின் 629 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: கிளேபாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

மலாக்கா தேர்தல்: கிளேபாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

பலமுனைப் போட்டி பக்கத்தான் ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் – அட்லி ஸஹாரி

பலமுனைப் போட்டி பக்கத்தான் ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி: 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி: 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே