Nov 7, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

நெகிரி செம்பிலான் மாநில அம்னோவில் தலைவர்களிடையே எந்தவிதமான பிளவும் இல்லை என்றும், மாநிலத்தின் அனைத்து அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அம்மாநில அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தன்னை ஆதரிக்கும் ஒரு தரப்பினர், இஸ்மாயில் லாசிமை ஆதரிக்கும் மற்றொரு தரப்பினர், லெங்கேங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் அஸ்னா அமினை ஆதரிக்கும் மூன்றாவது தரப்பினர் என மாநில அம்னோ மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளதாகக் கூறப்படும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

மேலும், தலைவர்களிடையே மோதலை உருவாக்கும் நோக்கில் இத்தகைய செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை விஸ்மா அம்னோவில் நடைபெற்ற பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்னோ தொகுதித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் ஜலாலுடின் அலியாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் இஸ்மாயில் லாசிமும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு