மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி வலுவான வெற்றியைப் பெறுவதே தனது முக்கிய நோக்கம் என்றும், மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்படுவது தனது அரசியல் இலக்கு அல்ல என்றும் அம்மாநில பாரிசான் நேஷனல் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அரசியல் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே பாரிசான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அப்துல் ரவுஃப், தேர்தலில் தோல்வியடைந்தால் பதவிகளைப் பற்றி கனவு காண்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாரிசான் நேஷனல் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தால், முதலமைச்சர் பதவிக்கு அப்துல் ரவுஃப் யுசோ பரிந்துரைக்கப்படுவார் என்று கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி அறிவித்திருந்ததற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அப்துல் ரவுஃப் இவ்வாறு கூறியுள்ளார்.








