Nov 6, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அன்வார் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அன்வார் வலியுறுத்து

மலாக்கா மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள், பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பு கொண்ட மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நல்லுறவும் ஒரே நோக்கமும் இருப்பது, மேம்பாட்டுத் திட்டங்களைச் சுமுகமாகச் செயல்படுத்தவும் மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவசியம் என நேற்றிரவு பாயா ரும்புட் தொகுதியில் நடைபெற்ற 'செராமா பெர்டானா மலாக்கா ரூமா கித்தா’ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

மேலும், பாயா ரும்புட் தொகுதி வேட்பாளர் டத்தோ அஸ்மான் அபிடின் மற்றும் கிளேபாங் தொகுதி வேட்பாளர் ஃபார்ஸானா ஹயானி முஹமட் நாசீர் ஆகியோர் மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒரே திசையில் பயணிப்பவர்கள் என்றும், அரசாங்கத்தின் கொள்கைகளை அடிமட்ட மக்களிடம் சிறப்பாகக் கொண்டு செல்ல அவர்களின் நம்பகத்தன்மையும் நேர்மையும் அவசியம் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் பிரதிநிதிகள் பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கும் நிலையில், தொகுதி மக்களின் தேவைகளையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் விரைவாகக் கவனிக்க முடியும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →