Nov 5, 2026
Thisaigal NewsYouTube

அன்வாரின் மலாக்கா வருகை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உற்சாகம் – அட்லி ஸஹாரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வாரின் மலாக்கா வருகை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உற்சாகம் – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலாக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்தது, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாக மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் ஆறாவது நாளில், கிளெபாங், ஆயர் குரோ, பாயா ரூம்புட் மற்றும் மச்சாப் ஜெயா ஆகிய நான்கு தொகுதிகளில் வாக்காளர்களையும் தேர்தல் பணியாளர்களையும் பிரதமர் சந்தித்ததாக அவர் கூறினார்.

மேலும், போக்குவரத்து நெரிசல், அரசாங்கச் சேவைகளில் ஏற்படும் தாமதம், உள்ளூர் வணிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகள் காணப்படும் என்றும் அட்லி தெரிவித்தார்.

மலாக்காவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் தினசரி செய்தியாளர் சந்திப்பில் அட்லி ஸஹாரி இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →