Nov 4, 2026
Thisaigal NewsYouTube

பக்காத்தான் தேர்தல் அறிக்கை வெறும் ஆவணமாக முடிந்துவிடக்கூடாது - அமனா துணைத் தலைவர் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பக்காத்தான் தேர்தல் அறிக்கை வெறும் ஆவணமாக முடிந்துவிடக்கூடாது - அமனா துணைத் தலைவர் வலியுறுத்து

பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டுள்ள “மலாக்கா ரூமா கித்தா” தேர்தல் அறிக்கையானது, வெறும் தேர்தல் முழக்கமாக இல்லாமல் தெளிவான கொள்கைத் திட்டங்களைக் கொண்டுள்ளதாக அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஜாஹிட் யுசோஃப் ராவா தெரிவித்துள்ளார்.

மூன்று முக்கிய அம்சங்கள் மற்றும் 12 இலக்குகளைக் கொண்ட இந்த அறிக்கையில், குறைந்த விலை வீடுகள், தரமான வேலை வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், மக்கள் நலன், போக்குவரத்து, இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் தூய்மையான நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் உள்ளூர் அதிகார அமைப்புகளின் ஒப்பந்தங்களில் 30 விழுக்காட்டை இளைஞர்களுக்கு ஒதுக்கும் திட்டமானது வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், 2032-ஆம் ஆண்டிற்குள் 2.5 கோடி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இலக்கு உள்ளூர் வணிகர்கள் மற்றும் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் அறிக்கை வெறும் பிரசார ஆவணமாக முடிந்துவிடக்கூடாது என்றும், ஒவ்வொரு வாக்குறுதிக்கும் இலக்கு, காலக்கெடு மற்றும் முன்னேற்ற அறிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவே பக்காத்தான் ஹராப்பான் முன்வைக்கும் நிர்வாகமாகும். இத்திட்டம் கண்ணியமானதாகவும், கண்காணிக்கக்கூடியதாகவும், மலாக்கா மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வளர்ச்சியை முன்னெடுப்பதாகவும் அமையும் என்று முஜாஹிட் யுசோஃப் ராவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
தேர்தல் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துவீர்- பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு கோரிக்கை

தேர்தல் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துவீர்- பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு கோரிக்கை

மலாக்கா தேர்தலில் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – அடாம் அட்லி

மலாக்கா தேர்தலில் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – அடாம் அட்லி

மலாக்கா தேர்தல்: 3 முக்கியக் கொள்கைகள், 12 மக்கள் நல இலக்குகள் – ஊழல் கலாசாரத்தை ஒழிக்க பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி

மலாக்கா தேர்தல்: 3 முக்கியக் கொள்கைகள், 12 மக்கள் நல இலக்குகள் – ஊழல் கலாசாரத்தை ஒழிக்க பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்