Nov 3, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலில் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – அடாம் அட்லி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலில் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – அடாம் அட்லி

மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பது அவசியம் என்றும், அதன் மூலம் அவர்கள் எதிர்காலத் தலைவர்களாக உருவாகத் தேவையான அரசியல் அனுபவத்தைப் பெற முடியும் என்றும் பி.கே.ஆர். மலாக்கா மாநிலத் தலைமை மன்றத்தின் இடைக்காலத் தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார்.

தானியங்கி வாக்காளர் பதிவு மற்றும் 18 வயதில் வாக்களிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இளம் தலைமுறையினரின் பிரதிநிதித்துவம் ஜனநாயகச் செயல்பாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இளம் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது கட்சியில் அவர்களின் செல்வாக்கு அல்லது தலைவர்களுடனான நெருக்கத்தைவிட, சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்காமல், கொடிகள் கட்டுவது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற பணிகளில் மட்டுமே அவர்களை ஈடுபடுத்துவது சரியல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இளம் வேட்பாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும், தங்களது திறமையை நிரூபிப்பதற்கான களமும் வழங்கப்பட வேண்டும் என அடாம் அட்லி வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: 3 முக்கியக் கொள்கைகள், 12 மக்கள் நல இலக்குகள் – ஊழல் கலாசாரத்தை ஒழிக்க பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி

மலாக்கா தேர்தல்: 3 முக்கியக் கொள்கைகள், 12 மக்கள் நல இலக்குகள் – ஊழல் கலாசாரத்தை ஒழிக்க பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்