Nov 2, 2026
Thisaigal NewsYouTube

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வெளியிட்ட கருத்து, மடானி அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சி என ஜசெக. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் குற்றம்சாட்டியுள்ளார்.

சபா, சரவாக் மாநிலங்களில் 2026ஆம் ஆண்டுக்கான சில கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஸாஹிட் கூறியிருந்தார். ஆனால், நிதி அமைச்சர் எந்த நிதியும் குறைக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளதாக ராயர் தெரிவித்தார்.

இதனால் அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம், துணைப் பிரதமர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சபாநாயகர் ஜொஹாரி அப்துல், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப விரும்பினால், முறையான தீர்மானத்தைச் சமர்ப்பிக்குமாறு ராயரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு