Nov 2, 2026
Thisaigal NewsYouTube

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மலாக்கா மாநிலத் தேர்தலில் மசீசவின் நான்கு வேட்பாளர்களும், ஜசெகவின் நான்கு வேட்பாளர்களும் பொது விவாவதத்தில் பங்கேற்க வேண்டும் என்று மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ பொயே தியோங் சவால் விடுத்துள்ளார்.

நான்குக்கு நான்கு என்ற நிலையில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் பொது விவாதத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுமானால் பொது விவாதத்தை எதிர்கொள்ள ஜசெக தயாராக இருக்கிறது. இதன் மூலம் இரு கட்சிகளின் நிலையையும் வாக்காளர்கள் மதிப்பீடு செய்ய முடியும் என்று இன்று மலாக்காவில் புக்கிட் பியாதுவில் உள்ள பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் கூ பொயே தியோங் இதனைத் தெரிவித்தார்.

ஜசெகவின் ஒரு வேட்பாளரை மட்டும் மசீச பொது விவாதத்திற்கு அழைப்பதற்குப் பதிலாக, இரு கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதிக்க மசீச முன்வர வேண்டும் என்றார். விவாதத்தை மலாய் அல்லது சீன மொழியில் நடத்த ஜசெக தயாராக இருப்பதாகவும், இருப்பினும் மலாய் மொழியில் விவாதம் நடத்துவதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலாய் மொழியில் விவாதம் நடத்தினால், மசீசவின் உண்மையான அரசியல் நிலைப்பாட்டை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும், மலாய் மற்றும் சீன மொழிகளில் வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைக்கும் மசீசவின் அணுகுமுறையை மக்களும் தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூ பொயே தியோங் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஜசெக. தேசிய அரசியல் கல்விப் பிரிவு இயக்குநரும், ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாவர்ட் லீ சுவான் ஹோவ்வும் உடனிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு

மலாக்கா முதலமைச்சர் வேட்பாளராக அட்லி ஸஹாரியை அறிவித்தது பக்காத்தான்: கூட்டணித் தலைவர்கள் ஒருமித்த முடிவு

மலாக்கா முதலமைச்சர் வேட்பாளராக அட்லி ஸஹாரியை அறிவித்தது பக்காத்தான்: கூட்டணித் தலைவர்கள் ஒருமித்த முடிவு

மலாக்கா தேர்தலில் வென்றால் பெரிக்காத்தானுக்கு ஆட்சிக்குழுவில் இடமளிக்கப்படும்: ஸாஹிட் ஹாமிடி

மலாக்கா தேர்தலில் வென்றால் பெரிக்காத்தானுக்கு ஆட்சிக்குழுவில் இடமளிக்கப்படும்: ஸாஹிட் ஹாமிடி

மலாக்கா தேர்தல்: வீடுகள், வருமான உயர்வுக்கு பக்காத்தான் ஹராப்பான் முக்கியத்துவம்

மலாக்கா தேர்தல்: வீடுகள், வருமான உயர்வுக்கு பக்காத்தான் ஹராப்பான் முக்கியத்துவம்