Nov 1, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: வீடுகள், வருமான உயர்வுக்கு பக்காத்தான் ஹராப்பான் முக்கியத்துவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: வீடுகள், வருமான உயர்வுக்கு பக்காத்தான் ஹராப்பான் முக்கியத்துவம்

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையானது இன்னும் சில நாள்களில் வெளியிடப்படவுள்ள நிலையில், குறைந்த விலையில் வீடுகள் வழங்குதல், மக்களின் வருமானத்தை உயர்த்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவு, மாணவர்களின் நலன் மற்றும் அரசாங்க உதவிகளை எளிதாகவும் வெளிப்படையாகவும் பெறுவதற்கான நடவடிக்கைகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என பக்காத்தான் தேர்தல் பிரிவு செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 24 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

அதேவேளையில், தண்ணீர் கட்டணம், வேலை வாய்ப்பு, வெள்ளப் பாதிப்பு, வடிகால் வசதி, தெருவிளக்குகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகளின் பராமரிப்பு உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனக் கூறியுள்ளது.

இதனிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களைக் கைப்பற்றிய பாரிசான் நேஷனல், மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →