Oct 31, 2026
Thisaigal NewsYouTube

வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்பு: மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய வாக்குறுதிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்பு: மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய வாக்குறுதிகள்

மலாக்கா மாநிலத் தேர்தலில் வாழ்க்கைச் செலவின உயர்வைக் கட்டுப்படுத்துவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு பக்காத்தான் ஹராப்பான் முன்னுரிமை அளிக்கவுள்ளது.

கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதில் இந்தத் திட்டங்கள் குறித்த விரிவான விவரங்கள் இடம் பெறும் என்றும் அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தனிப்பட்ட அரசியல் தாக்குதல்களுக்குப் பதிலாக கொள்கைகள், திட்டங்கள், வேட்பாளர்களின் ஆற்றல் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்தல், நல்லாட்சியை நிலைநாட்டுதல் ஆகிய நான்கு கொள்கைகளின் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள் அமையும் என்றும் சைஃபுடின் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →