Oct 31, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: 24 வேட்பாளர்களுடன் பக்காத்தான் ஹராப்பான் களம் இறங்கியது!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: 24 வேட்பாளர்களுடன் பக்காத்தான் ஹராப்பான் களம் இறங்கியது!

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது 24 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. வேட்புமனுத் தாக்கல் அனைத்தும் எவ்விதப் பிரச்சினையுமின்றி நிறைவடைந்ததாக அதன் தேர்தல் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட அறிக்கையில், பிகேஆர் 10 வேட்பாளர்களையும், ஜனநாயகச் செயல் கட்சி ஏழு வேட்பாளர்களையும், அமானா கட்சி ஏழு வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, “மலாக்கா நமது இல்லம்” என்ற கருப்பொருளில் தேர்தல் பிரசாரத்தை பக்காத்தான் ஹராப்பான் தொடங்கியுள்ளது.

பிரசாரத்தின்போது எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் உண்மைகளின் அடிப்படையில் பதிலளிக்கப்படும் என்றும், தேர்தல் விதிமுறைகளை மதித்து நாகரிகமான அரசியல் அணுகுமுறையை அனைத்து வேட்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ அமிருடின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →