Oct 31, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலில் 28 இடங்களுக்கு 79 வேட்பாளர்கள் போட்டி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலில் 28 இடங்களுக்கு 79 வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா மாநிலத்தின் 28 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற 79 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 112 பேர் போட்டியிட்ட நிலையில், இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில், பக்காத்தான் ஹராப்பான் 24 வேட்பாளர்களையும், பாரிசான் நேஷனல் 23 பேரையும், பெர்சாமா 16 பேரையும், பெர்சத்து ஏழு பேரையும், பெரிக்காத்தான் நேஷனல் ஐந்து பேரையும், புத்ரா ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன. மேலும், மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

மொத்த வேட்பாளர்களில் 65 பேர் ஆண்கள்; 14 பேர் பெண்கள். 11 தொகுதிகளில் நேரடிப் போட்டியும், 11 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், ஆறு தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும் நடைபெறுகின்றன.

மலாக்காவில் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 697 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதியும், பொதுவாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →