மலாக்கா மாநிலத் தேர்தலில் யார் அதிக சத்தமாகப் பிரசாரம் செய்கிறார்கள் என்பது வெற்றியைத் தீர்மானிக்காது; மாறாக, மக்கள் யாரை அதிகம் நம்புகிறார்கள் என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மலாக்கா தேர்தலை ஜனநாயகத் திருவிழாவாகக் கருதுவதாகவும், மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் அமைதியான பிரசாரத்தை முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.
அதேவேளையில், வெறுப்புப் பேச்சு, சமூகப் பிளவை ஏற்படுத்தும் அரசியல் மற்றும் ஒரு சமூகத்தின் நலனை மற்றொரு சமூகத்தின் நலனுக்கு எதிராக முன்னிறுத்தும் போக்கை பக்காத்தான் ஹராப்பான் ஏற்காது என்றும் அவர் தெரிவித்தார்.








