Oct 31, 2026
Thisaigal NewsYouTube

புத்ராஜெயா வரை நீளும் BN-PN அரசியல் ஒத்துழைப்பு: அம்னோ நம்பிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புத்ராஜெயா வரை நீளும் BN-PN அரசியல் ஒத்துழைப்பு: அம்னோ நம்பிக்கை

பெரிக்காத்தான் நேஷனலுடனான பாரிசான் நேஷனலின் அரசியல் ஒத்துழைப்பு, புத்ராஜெயா வரை விரிவடையும் என அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானிலிருந்து மலாக்கா வரை இரு கூட்டணிகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த ஒத்துழைப்பு இம்முறை மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மையமான புக்கிட் கட்டிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தரப்பினரின் தேர்தல் இயந்திரங்களும் தொகுதிகள் தோறும் இணைந்து செயல்படுவதைச் சுட்டிக் காட்டினார்.

இரு பெரிய அரசியல் அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அடிமட்ட மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →