மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறும் என வாவாசான் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் தேர்தலில் இரு கூட்டணிகளின் ஒத்துழைப்பால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்ததைச் சுட்டிக் காட்டிய அவர், அதே ஒற்றுமை மலாக்காவிலும் தேர்தல் வெற்றியைத் தேடித்தரும் என்றார்.
மேலும், அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே இணைப்புப் பாலமாக வாவாசான் செயல்பட்டதாகவும், தற்போது இரு தரப்பினரும் கைகோர்த்துச் செயல்படுவதாகவும் அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
மலாக்காவில் தேசிய முன்னணி 23 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.








