Nov 2, 2026
Thisaigal NewsYouTube

மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மச்சாப் ஜெயா தொகுதியில் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் நீர் மற்றும் கனிம வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மலாக்கா மாநிலத் தேர்தலில் மச்சாப் ஜெயா தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் டத்தோ ஜினி லிம்முக்கு ஆதரவாக நேற்று இரவு தாமான் கெரோஜா, மலாக்கா பகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தபோது, மகளிர், குடும்பம் மற்றும் சமூக நலத்துறைக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றிய டத்தோ ஜினி லிம், மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியவர் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், மச்சாப் ஜெயா தொகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைச் சுட்டிக் காட்டிய அவர், மலாக்கா மாநிலத்தில் நிலையான ஆட்சியை உறுதிப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

இன, மத விவகாரங்களைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக ஸாஹிட் மீது ராயர் குற்றச்சாட்டு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு