Nov 2, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்: அரசாங்க வளங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

மலாக்கா மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் ரிம் தொகுதியில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ கைடீரா அபு ஸாஹார், அரசாங்கக் கட்டிடம் மற்றும் வளங்களை, தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் கூறி பக்காத்தான் ஹராப்பான் போலீசில் புகார் அளித்துள்ளது.

இது குறித்து பிகேஆர் மத்திய தலைமை மன்ற உறுப்பினர் சித்தி அயிஷா ஷாய்க் இஸ்மாயில் கூறுகையில், ஜாசின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று அப்புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு சுமார் 30 பேருக்கு நன்கொடைகள் வழங்கிய நிகழ்ச்சியில், அரசாங்க வளங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளையில், ரிம் ஜாபெருன் வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், அதில் வழங்கப்பட்ட உணவுப் பொருள் கூடைகளில் ஜாசின் மாநகர் மன்றத்தின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவும் சித்தி அயிஷா தெரிவித்துள்ளார்.

இதற்கான புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும், நன்கொடைகள் வழங்கும் நிகழ்ச்சி முழுவதும், ஜாசின் அம்னோ துணைத் தலைவர் முகம் இடம்பெற்ற உடைகளை எம்பிஜே அதிகாரிகள் அணிந்திருந்ததற்கான ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக சித்தி அயிஷா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் நாளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்தி, பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா பாரிசான் வேட்பாளர் மீது பக்காத்தான் போலீஸ் புகார்... | Thisaigal News