Nov 5, 2026
Thisaigal NewsYouTube

சிஎஸ்எ ஒப்பந்தத்தை ‘தஜ்ஜால் அணுகுமுறை’ என விமர்சித்த ஹாடி – மலாக்கா பக்காத்தான் கடும் கண்டனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிஎஸ்எ ஒப்பந்தத்தை ‘தஜ்ஜால் அணுகுமுறை’ என விமர்சித்த ஹாடி – மலாக்கா பக்காத்தான் கடும் கண்டனம்

அரசியல் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தமான சிஎஸ்எ (CSA) அணுகுமுறையை ‘தஜ்ஜால்’ அணுகுமுறையுடன் ஒப்பிட்ட பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கருத்துக்கு மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘தஜ்ஜால் அணுகுமுறை’ என்பது ஏமாற்றும் அல்லது பொய்யான வழிமுறை என்று பொருள் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துவான் அட்லி ஸஹாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் ஒப்பந்தங்களை அவற்றின் உள்ளடக்கம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர, மத உணர்வுகளைத் தூண்டும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சிக்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் வருவாய் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்றும், அரசியல் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு மக்களின் நலத்திட்டங்கள் நிபந்தனைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் சிஎஸ்எ ஒப்பந்தத்தில் இதற்கு முரணான அம்சங்கள் இருந்தால், அவற்றை ஆதாரத்துடன் சுட்டிக் காட்ட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

மேலும், கடந்த 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி பங்கோல் பெரடோங்கில் அப்துல் ஹாடி அவாங் ஆற்றிய 'அமானாட் ஹாஜி ஹாடி’ உரையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் சமூகப் பிளவுகளை பாஸ் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அட்லி ஸஹாரி வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →