தேர்தல் பிரசாரத்தின்போது பக்காத்தான் ஹராப்பானின் கொடிகள் மற்றும் பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஆதரவாளர்கள் ஈடுபடக் கூடாது என மலாக்கா மாநில கெஅடிலான் தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் எச்சரித்துள்ளார்.
ஆதரவாளர்கள் பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுவதுடன், இவ்விவகாரத்தைப் போலீசாரின் கவனத்திற்கு விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று கிளேடாங், புலாவ் காடோங்கில் நடைபெற்ற கோபிலி ஹராப்பான் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு வெவ்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரக் கொடிகள் சேதப்படுத்தப்பட்டதாக இரண்டு போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் காலம் முழுவதும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற கட்சிகளின் பிரசாரப் பொருட்களைச் சேதப்படுத்துவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.








