சரவாக் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேவேளையில், வேட்புமனு தாக்கலானது வரும் நவம்பர் 28-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்குப்பதிவு டிசம்பர் 8-ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரம்லான் ஹாருன் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








