மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணைந்து செயல்படும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், புத்ராஜெயாவுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதால், தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களையும் மக்களின் நலன் சார்ந்த தேவைகளையும் விரைவாக முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக, பாயா ரும்புட் தொகுதி வேட்பாளர் அஸ்மான் அபிடின் மற்றும் கெலேபாங் தொகுதி வேட்பாளர் ஃபர்சானா ஹயானி நாசிர் ஆகியோரைக் குறிப்பிட்ட அன்வார், தமது அலுவலகத்துடன் நேரடித் தொடர்பு கொண்ட பிரதிநிதிகள் மக்களின் குரலை அரசாங்கத்திடம் கொண்டு செல்ல உதவுவார்கள் என்றார்.
மலாக்கா தேர்தலில் அரசாங்கத்தின் கொள்கைகளை அடிமட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இத்தகைய மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.








