Nov 6, 2026
Thisaigal NewsYouTube

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பாயா ரும்புட் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ அஸ்மான் அபிடின், இந்திய சமூகத்தினரின் நலன், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று பாயா ரும்புட் தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் இந்திய சமூகத்தினரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி, நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வணிகத் துறைகளில் இந்திய சமூகத்திற்கான அரசாங்க ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தொழில்திறன் பயிற்சிகளை வழங்கவும் திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மையங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

குறிப்பாக, வேலை வாய்ப்புகளைத் தேடி இளைஞர்கள் மலாக்காவை விட்டு வெளியேறும் நிலையைத் தடுத்து, சொந்த மாநிலத்திலேயே போதுமான வருமானத்துடன் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தமது நீண்டகால இலக்கு என்றார்.

அத்துடன், வாழ்க்கைச் செலவின உயர்வு, நகர்ப்புற வறுமை மற்றும் போதிய வருமானமின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது தொகுதியின் 30 முதல் 40 விழுக்காடு மக்களை மட்டுமே சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட டத்தோ அஸ்மான் அபிடின், எஞ்சிய மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறியத் தொடர்ந்து பணியாற்றுவதாகக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மலாக்கா தேர்தல்: பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அன்வார் வலியுறுத்து

மலாக்கா தேர்தல்: பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அன்வார் வலியுறுத்து

அன்வாரின் மலாக்கா வருகை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உற்சாகம் – அட்லி ஸஹாரி

அன்வாரின் மலாக்கா வருகை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உற்சாகம் – அட்லி ஸஹாரி