Nov 7, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

மலாக்கா மாநிலத்தில் இவ்வார இறுதியில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பக்காத்தான் ஹராப்பான் தொண்டர்கள், தீபாவளிக்குத் தயாராகும் குடும்பங்களின் நேரத்தையும் தனிப்பட்ட வசதியையும் மதித்து நடக்க வேண்டும் என்று அம்மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி அறிவுறுத்தியுள்ளார்.

வாக்காளர்களிடம் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைக்கும் பணியில், 'அஸ்பிராசி மலாக்கா ரூம கித்தா’ என்ற வீடமைப்புத் திட்டமும் இடம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் முதல் முறையாக வீடு வாங்க விரும்புவோருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நாளை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதையும், நவம்பர் 9-ஆம் தேதி மலாக்காவில் மாற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அட்லி ஸஹாரி, இந்த வார இறுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மலாக்கா தேர்தல்: பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அன்வார் வலியுறுத்து

மலாக்கா தேர்தல்: பிரதமர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அன்வார் வலியுறுத்து