கோலாலம்பூர், டிசம்பர்.23-
பேரா மாநிலத்தைத் தளமாக கொண்டு செயல்பட்ட டாக்டர் டி.ஆர். சீனிவாசகம் (Darma Raja Seenivasagam), சகோதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் முற்போக்குக் கட்சியான பிபிபியின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ்.ஐ. ராஜா காலமானார். அவருக்கு வயது 86.
உடல் நலக்குறைவினால் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த எஸ்.ஐ. ராஜா, காலமானதை பிபிபி கட்சியின் நடப்புத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலமோகன் உறுதிப்படுத்தினார்.
ஒரு வழக்கறிஞரான எஸ்.ஐ. ராஜா கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை பிபிபி கட்சியின் தேசியத் தலைவராகவும், செனட்டராகவும் பொறுப்பு வகித்தார்.
பூச்சோங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கிற்குப் பிறகு எஸ்.ஐ. ராஜாவின் நல்லுடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் லோக் யியூ இந்து இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் மஇகா உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்.








