Apr 19, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்
அரசியல்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா சஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நியமனம் இன்று மார்ச் 4 ஆம் தேதி புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. பிரதமருக்கான மூத்த அரசியல் செயலாளர் பதவியில் ஏற்பட்டிருந்த காலியிடத்தை நிரப்பும் வகையில், இரண்டு ஆண்டு காலத்திற்கு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் செழுமை மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையை தெங்கு ஜப்ருல் சிறப்பாகவும் மனத்தாழ்மையுடனும் நிறைவேற்றுவார் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News