Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு இயக்கம்

Share:

ஜன.11-

அரசாங்கம் கூடிய விரைவில் நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தவிருக்கிறது. இணைய மோசடிகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் ஆளாகாமல் இருக்க, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் புரிதலையும் விழிப்புணர்வையும் அதிகரிக்க அவ்வியக்கம் நடத்தப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் சொன்னார். இடைநிலைப் பள்ளி நிலையில், இணைய மற்றும் சமூக வலைத்தளங்களை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றாரவர்.

கடந்தாண்டு 2.72 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 454 மோசடிச் சம்பவங்கள் பதிவானதையும் Fahmi சுட்டிக் காட்டினார்.

Related News