கோலாலம்பூர், நவ.7-
கடந்த வாரம் பினாங்கில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, விரைவுப் பேருந்துகளில் மின்சார சாக்கெட்டுகளைப் பயன்படுத்துதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விளக்கம் அளித்தள்ளார்.
Apad எனப்படும் தரைமார்க்க பொது போக்குவரத்து வாரியம் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் இச் சம்பவம் குறித்த முழு அறிக்கை கிடைக்கும் வரை இந்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
விரைவுப் பேருந்துகளில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவே, விரிவான ஆய்வு நடைபெறும் வரை ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








