Jun 25, 2026
Thisaigal NewsYouTube
“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி
அரசியல்

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியைச் சந்தித்ததன் மூலம், கட்சிக்குத் தாம் துரோகம் இழைத்து விட்டதாக முகைதீன் யாசின் கூறியுள்ள குற்றச்சாட்டை பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் மறுத்துள்ளார்.

தாம் ஓர் எதிர்கட்சித் தலைவர் என்பதால், யாரையும் சந்திக்கும் அனுமதியைக் கொண்டிருப்பதாகவும் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சந்திப்புகள் முகைதீனை ஏன் அச்சுறுத்துகிறது? என்றும் ஹம்ஸா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், முகைதீன் யாசினின் அது போன்ற குற்றச்சாட்டுகள் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான சாக்கு போக்குகள் என்றும், சிறுபிள்ளைத்தனமான இந்த விவகாரத்தை தான் வளர்க்க விரும்பவில்லை என்றும் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

Related News