Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி
அரசியல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

Share:

அலோர் ஸ்டார், மே.03-

அடுத்த 16-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கான அடிப்படை விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவதாக தேசியக் கூட்டணியான Perikatan Nasional உறுதியளித்துள்ளது. அலோர் ஸ்டாரில் நடைபெற்ற விவசாயிகளின் அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான், தற்போதுள்ள 1,500 ரிங்கிட் விலை விவசாயிகளின் வாழ்க்கைச் செலவிற்கு போதுமானதாக இல்லை என்பதால், இந்த விலை உயர்வை வரும் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாகச் சேர்ப்போம் எனத் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனைப் பேணவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய அவர், டீசல் மானியம் போன்ற உதவிகளை வழங்குவதில் தற்போதைய அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது என்றும் சாடினார்.

Related News