தனது கணவர் ராமச்சந்திரன் முனியாண்டிக்கு சிலாங்கூர் மாநில குத்தகை வழங்கப்பட்டதற்காக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் பதவி விலக வேண்டும் என்று டிஏபி– யின் பினாங்கு மாநில முன்னாள் தலைவர் டாக்டர் பி. இராமசாமி வலியுறுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
டிஏபி- யிலிருந்து வெளியேறியப் பின்னர் டாக்டர் இராமசாமி, மிக நியாயமாக பேசுவதைப் போல பாசாங்கு செய்கிறார் என்பதற்கு அவரின் இந்த செயல்காட்டுகிறது என்று தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
டாக்டர் இராமசாமி, பினாங்கு துணை முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்த போது, டிஏபியின் பொதுச் செயலாளரும், கட்சியின் தற்போதைய தலைவருமான லிம் குவான் எங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போது, அவரை பதவி விலகும்படி ஏன் கேட்டுக்கொள்ளவில்லை என்று தியோ நீ சிங் கேள்வி எழுப்பினார்.








