May 3, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் பிப்ரவரி மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
அரசியல்

மலேசியாவில் பிப்ரவரி மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

Share:

மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில், 18 வயது பூர்த்தியடைந்த மொத்தம் 36 ஆயிரத்து141 பேர், தானியங்கி பதிவு முறையின் கீழ் புதிய வாக்காளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

18 வயதையடைந்த அவர்கள் அனைவரும் தானாகவே இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், 14 ஆயிரத்து129 வாக்காளர்கள் தங்களது தொகுதியை மாற்றியுள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 322 பேர், தங்களது வாக்காளர் பிரிவு அல்லது தகுதி நிலையை மாற்றியுள்ளனர்.

அப்பட்டியலானது, கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி வரையில், 30 நாட்களுக்கு பொதுமக்கள் சரிபார்ப்புக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தங்களது பெயர், பட்டியலில் இல்லையென்றாலோ அல்லது வெளியிடப்பட்டுள்ள தகவலில் பிழைகள் இருந்தாலோ தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News