கோலாலம்பூர்,ஜூலை 12-
ஒற்றுமை அரசின் மூன்றாவது பட்ஜெட் 2025, அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி பிடிசில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அனைத்து அமைச்சர்களுக்கும் பட்ஜெட் மடானி 2025 உரையாடல் அமர்வுகளை அந்தந்த அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களிடையே நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாஃபஹ்மி பிடிசில்கூறினார்.
மடானி 2025 பட்ஜெட், தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவை முன்னணி பொருளாதார சக்தியாக ஆக்குவது உட்பட, மடானி பொருளாதார கட்டமைப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள அளவுகோல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அன்வார் கூறியதாக Fahmi குறிப்பிட்டார்.
நிதி அமைச்சராகவும் விளங்கி வரும் பிரதமர் அன்வார், பொருளாதாரத்தை மறுசீரமைத்தல் போன்ற பொருளாதார பிரதமர உயர்த்துவதற்கான முயற்சிகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆராய வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.








