கோலாலம்பூர், டிசம்பர்.17-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த அமைச்சரவை மாற்றங்களின் படி, இரண்டு புதிய நியமனங்கள் உட்பட, 7 அமைச்சர்களும், 8 துணையமைச்சர்களும், இஸ்தானா நெகாராவில் இன்று புதன்கிழமை, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த பதவியேற்கும் சடங்கானது இன்று காலை 10 மணியளவில் அரண்மனையிலுள்ள சிங்காசானா கெச்சில் அரங்கில் நடைபெற்றது.
தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே முன்னிலையில், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களும், துணையமைச்சர்களும் தங்களது நியமனக் கடிதங்களில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லேமுன்னிலையில், அமைச்சர்களும், துணையமைச்சர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் ரகசியக் காப்புப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.








