Oct 24, 2025
Thisaigal NewsYouTube
வியாபாரிகளின் பிரச்னைகளை கண்டறிந்தார் அரிச்சந்திரன்
அரசியல்

வியாபாரிகளின் பிரச்னைகளை கண்டறிந்தார் அரிச்சந்திரன்

Share:

லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிச்சந்திரன், தொகுதி மக்களின் பிரச்னைகளை கேட்டறிவது மட்டுமின்றி தொகுதியில் உள்ள சிறு வணிகர்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் கண்டறிந்து வருகிறார். நேற்று இரவு தாமான் மாக்மோர் இரவுச் சந்தையில் தமது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், வரும் லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளரகள் தம்மை ஆதரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறார்.

லூனாஸ் சட்டமன்ற உறுப்பினராக, தொகுதி வாக்காளர்கள் தம்மை வெற்றி அடையச் செய்வார்களேயானால் அவர்களுக்கு சேவையை வழங்கக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக தாம் இருப்பதுடன் அவர்களுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் பிரச்னையை நேரடியாக கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணக்கூடிய முயற்சியிலும் தாம் ஈடுபடப்போவதாக அரிச்சந்தின் உறுதி அளித்தார்.

தற்போது தாமான் மாக்மோர் இரவு சந்தையில் கூடாரத்தின் கீழ் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் மழைக்காலங்களில் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தாம் தேர்வு செய்யப்படுவது மூலம் வியாபாரிகளுக்கு நிரந்த வர்த்தகத் தலங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் சாவி சின்னத்தில் போட்டியிடும் அரிச்சந்திரன் குறிப்பிட்டார்.

Related News