Oct 28, 2025
Thisaigal NewsYouTube
சுங்கை பக்காப் இடைத் தேர்தலில் நேரடிப் போட்டி
அரசியல்

சுங்கை பக்காப் இடைத் தேர்தலில் நேரடிப் போட்டி

Share:

பினாங்கு, ஜூன் 22-

பினாங்கு, நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்கத்தான் நேஷனலுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் அமினுதீன் பாக்கி கல்விக் கழகத்தின் வட பிராந்தியத்திற்கான முன்னாள் இயக்குநர் 60 வயது டாக்டர் ஜூஹாரி அரிஃபின், ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக பாஸ் கட்சியின் நிபோங் தெபால் தொகுதியின் உதவித் தலைவர் 56 வயது ஆபிதீன் இஸ்மாயில் போட்டியிடுகிறார்.

சுங்கை பக்காப் சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் நிபோங் தெபால், டெவான் செர்பாகுனா ஜாவி மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 10.00 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, தேர்தல் நிர்வாக அதிகாரி கைருல்நிஸாம் ஹாஷிம், இந்த இடைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இருவர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் எந்தவொரு வேட்பாளரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை. முன்னாதாக, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்திக்கொண்டு தத்தம் வேட்பாளருடன் புடை சூழ வேட்புமனுத்தாக்கல் மையத்திற்கு வந்திருந்திருந்தனர்.

இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு வரும் ஜுலை 2 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த மூன்று தவணைகாலம் பக்காத்தான் ஹராப்பான் கைவசம் இருந்த சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட பாஸ் கட்சி வேட்பாளர் நோர் ஜம்ரி லத்தீஃப் கைப்பற்றினார். கடந்த மே 24 ஆம் தேதி அவர் காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது..

இந்த இடைத் தேர்தலில் 39 ஆயிரத்து 279 பதிவு பெற்ற வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்