Sep 17, 2026
Thisaigal NewsYouTube
துவாங்கு முஹ்ரிஸை நீக்கியதாக அறிவித்தது தேசத் துரோகம் - முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் காட்டம்
அரசியல்

துவாங்கு முஹ்ரிஸை நீக்கியதாக அறிவித்தது தேசத் துரோகம் - முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் காட்டம்

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் இருந்து நீக்கியதாக உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று செப்டம்பர் 16-ஆம் தேதி மாநில ஆட்சிக் குழுவால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையானது, துவாங்கு முஹ்ரிஸுக்கு எதிரான தேசத் துரோகச் செயலாகும் என்று அமினுடின் ஹாருன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் தொடர்புடைய ஒவ்வொரு ஆட்சிக்குழு உறுப்பினர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மாநில அரசியலமைப்பின்படி, யாங் டிபெர்துவான் பெசார் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மாநில ஆட்சிக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், துவாங்கு முஹ்ரிஸை கடந்த ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கியது சட்டபூர்வமானது என்றும், துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார் நெகிரி செம்பிலானின் புதிய ஆட்சியாளர் என்றும் தெரிவித்துள்ளது.

Related News