Sep 14, 2026
Thisaigal NewsYouTube
எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து
அரசியல்

எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து

Share:

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமை மன்றக் கூட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உடனடியாக கூட்ட வேண்டும் என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து, இந்தக் கூட்டம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் அரசியல் நிலைத்தன்மை குறித்து கவலைகளை ஏற்படுத்துவதாகவும் போக்குவரத்து அமைச்சருமான லோக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழல் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் ஸாஹிட் ஹாமிடி வெளியிட்ட கருத்தில், பிரதமர் அன்வாரை மறைமுகமாக விமர்சித்ததுடன், நாட்டை ஆட்சி செய்வதில் அம்னோ இன்னும் சிறப்பாகப் செயல்பட முடியும் எனக் கூறியிருந்தார்.

மேலும், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலை ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து நீக்கி, அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு விமர்சகர்களுக்கு அவர் சவால் விடுத்திருந்தார்.

அதேவேளையில், அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் அம்னோவும் பாரிசானும் தங்களது சொந்த பாதையைத் தேர்வு செய்ய சுதந்திரம் கொண்டுள்ளதாக ஸாஹிட் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை அதற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்ற உறுதியையும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

Related News

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்