16-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, பாஸ் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி 126 நாடாளுமன்றத் தொகுதிகளை இலக்காக வைத்து தேர்தல் தயார் நிலைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றது.
இந்த 126 தொகுதிகளும் வலுவான வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், சரவாக் மாநிலத்திலுள்ள தொகுதிகள் இதில் சேர்க்கப்படவில்லை.
இதனிடையே பாஸ் கட்சியானது 126 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், கூட்டணியில் உள்ள ஒரே கருத்துடைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது பாஸின் கொள்கை என்றும் பெரிக்காத்தான் தகவல் பிரிவு தலைவர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பாஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சியின் உயர்மட்ட தலைமை இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
15-ஆவது பொதுத்தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் 74 நாடாளுமன்ற இடங்களை கைப்பற்றியது. இதில் பாஸ் மட்டும் 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








