Sep 11, 2026
Thisaigal NewsYouTube
கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்
அரசியல்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

Share:

கோலா கங்சார் பெர்சாத்து பிரிவு துணைத் தலைவர் டத்தோ அட்லி ஷா அஹ்மாட் தா மற்றும் அந்தப் பிரிவின் 11 கிளைத் தலைவர்களில் 8 பேர், அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் விலகியதோடு, பெர்சாத்து கட்சியிலிருந்தும் வெளியேறுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

பூங்கா ராயா, உலு கெனாஸ், சயோங் லெம்பா, பெண்டாங் கெரிங், செங்காங், ஜெர்லுன், புக்கிட் ரெசிடன் மற்றும் லெம்போர் ஆகிய 8 கிளைகளின் தலைவர்களும் இந்த முடிவில் இணைந்துள்ளனர்.

கட்சியின் எதிர்கால அரசியல் போராட்டம் மற்றும் கோலா கங்சார் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாங்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ள வேறு அரசியல் தளத்தின் மூலம் தொடர்ந்து செயல்பட முடிவு செய்ததாக அட்லி ஷா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கோலால கங்சார் பெர்சாத்து பிரிவில் இருந்த 11 கிளைகளில் தற்போது 3 கிளைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதற்கிடையில், கோல கங்சாரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெர்சாத்து உறுப்பினர்கள் இந்த விலகல் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்ததாகவும் அட்லி ஷா குறிப்பிட்டுள்ளார்.

Related News

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

“வரலாற்றை அழிக்கத் தேவையில்லை” – நஜிப்பின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி

“வரலாற்றை அழிக்கத் தேவையில்லை” – நஜிப்பின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி

ஊழல் குற்றவாளிகளுக்கு முழுத் தண்டனை: பக்காத்தான் ஹராப்பான் திட்டவட்டம்

ஊழல் குற்றவாளிகளுக்கு முழுத் தண்டனை: பக்காத்தான் ஹராப்பான் திட்டவட்டம்