நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் இருந்து நீக்கும் பிரகடனத்தில் தாம் கட்டாயப்படுத்தியே கையெழுத்திட்டதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கூறியிருப்பதை, ஜொஹோல் உண்டாங் உள்ளிட்ட 6 பேரின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.
இது குறித்து அவர்களின் வழக்கறிஞர் முஹமட் கைருல் அஸாம் அப்துல் அஸிஸ் Mohd கூறுகையில், துவாங்கு முஹ்ரிஸை நீக்குவதற்கான காரணங்கள் விளக்கப்பட்ட பின்னர், இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அவர் கையெழுத்திட்ட நேரத்தில் அவரது சொந்த வழக்கறிஞர் டத்தோ அபு பாக்கார் இசா ரமாட் உடனிருந்ததாகவும் முஹமட் கைருல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பிரகடனத்தில் கையெழுத்திட்ட போது எந்தவித கட்டாயமும் அழுத்தமும் இல்லை என்றும், தற்போது அவர் கூறும் ‘கட்டாயப்படுத்தப்பட்டேன்’ என்ற குற்றச்சாட்டு பின்னர் உருவாக்கப்பட்டதாகவும் முஹமட் கைருல் அஸாம் தெரிவித்தார்.








