மலாக்கா மாநில சட்டமன்றம் இம்மாத இறுதிக்குள் கலைக்கப்படலாம் என அம்மாநில முதலமைச்சர் அப்துல் ராவுஃப் யுசோ சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை கம்போங் பெர்தாம் உலு குடியிருப்பாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்றம் கலைக்க இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமைகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது.
கடந்த 2021 -ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி 21 இடங்களையும், பக்காத்தான் ஹராப்பான் 5 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களையும் கைப்பற்றின.
இதனிடையே எதிர்வரும் மலாக்கா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ராவுஃபுக்கு, பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி ஏற்கெனவே அதிகாரம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








