Sep 10, 2026
Thisaigal NewsYouTube
“வரலாற்றை அழிக்கத் தேவையில்லை” – நஜிப்பின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி
அரசியல்

“வரலாற்றை அழிக்கத் தேவையில்லை” – நஜிப்பின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் நாட்டுக்கும் அம்னோ கட்சிக்கும் ஆற்றிய பங்களிப்புகளை தாங்கள் மறக்கவில்லை என்று அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மாற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்களுக்கான உதவிகளில் நஜிப்பின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை என்றும், கட்சியில் அவர் வகித்த பங்கும் நாட்டின் வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் வரலாற்றை அழிக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்ட நோராய்னி, அரசியல் மாறிவிட்டது என்பதற்காக அவரது பங்களிப்புகளை மறுக்க முடியாது என்று இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ மகளிர் பேரவையில் கொள்கை உரையாற்றிய போது தெரிவித்தார்.

மேலும், நஜிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஊழல் குற்றவாளிகளுக்கு முழுத் தண்டனை: பக்காத்தான் ஹராப்பான் திட்டவட்டம்

ஊழல் குற்றவாளிகளுக்கு முழுத் தண்டனை: பக்காத்தான் ஹராப்பான் திட்டவட்டம்

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் பாரிசான், பக்காத்தானில் ஏற்படப் போகும் விளைவுகள்: அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் பாரிசான், பக்காத்தானில் ஏற்படப் போகும் விளைவுகள்: அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு

மலாக்காவில் தனித்து போட்டியிடுவது உட்பட அனைத்து சூழ்நிலைகளுக்கும் பக்காத்தான் தயார் - அமிருடின் தகவல்

மலாக்காவில் தனித்து போட்டியிடுவது உட்பட அனைத்து சூழ்நிலைகளுக்கும் பக்காத்தான் தயார் - அமிருடின் தகவல்

மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்க இன்னும் 2 வெள்ளிக்கிழமைகள் உள்ளன - முதலமைச்சர் ராவுஃப் கோடி காட்டினார்

மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்க இன்னும் 2 வெள்ளிக்கிழமைகள் உள்ளன - முதலமைச்சர் ராவுஃப் கோடி காட்டினார்

மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாகக் குற்றச்சாட்டு: ஹாடியிடம் போலீசார் விசாரணை

மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாகக் குற்றச்சாட்டு: ஹாடியிடம் போலீசார் விசாரணை

ஹாடி கூறிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு; பிகேஆர் தலைவர்கள் 3 போலீஸ் புகார்

ஹாடி கூறிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு; பிகேஆர் தலைவர்கள் 3 போலீஸ் புகார்