கோத்தா கினபாலு, நவம்பர்.15-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 596 பேர் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்தது.
இன்று காலை 10 மணியுடன் முடிவுற்ற வேட்புமனுத் தாக்கலில் 596 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இன்று பிற்பகலில் எஸ்பிஆர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான ஆளும் கட்சியான GRS எனப்படும் Parti Gabungan Rakyat Sabah கூட்டணி சார்பில் 55 பேர் போட்டியிடுகின்றனர். டத்தோ ஶ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் கட்சி அனைத்து 73 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
Parti Impian Sabah 72 வேட்பாளர்களையும், டத்தோஸ்ரீ ஜெப்ரி கிட்டிங்கான் தலைமையிலான STAR கட்சி 46 வேட்பாளர்களையும், பாரிசான் நேஷனல் 45 வேட்பாளர்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 42 வேட்பாளர்களையும், KDM கட்சி 40 வேட்பாளர்களையும், UPKO 25 வேட்பாளர்களையும், பக்காத்தான் ஹராப்பான் 22 வேட்பாளர்களையும், Parti Kebangsaan Sabah 20 வேட்பாளர்களையும், Anak Negeri கட்சி 17 வேட்பாளர்களையும், PPRS 16 வேட்பாளர்களையும், PBK கட்சி 14 வேட்பாளர்களையும், Rumpun கட்சி 7 வேட்பாளர்களையும் தேர்தல் களத்தில் இயக்கியுள்ளதாக எஸ்பிஆர் அறிவித்துள்ளது.
அதே வேளையில் சுயேட்சை வேட்பாளர்களாக 74 பேர் போட்டியிடுகின்றனர். சபா தேர்தலில் மொத்தம் 24 கட்சிகள் போட்டியிடுவதாக அது குறிப்பிட்டுள்ளது.








