May 3, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவுக்குத் திரும்புகிறாரா கைரி?
அரசியல்

அம்னோவுக்குத் திரும்புகிறாரா கைரி?

Share:

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், அம்னோவிற்குத் திரும்ப விரும்புகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சியில் மீண்டும் இணைய அவர் விண்ணப்பித்துள்ளார்.

அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி நேற்று தம்மைச் சந்தித்த போது, கட்சிக்குத் திரும்புவதற்கான தனது விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்ததாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

கைரியின் விண்ணப்பம் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அது மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தரப்பிடம் அனுப்பபடும் என அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் இதற்கு முன் பதவி வகித்து வந்த கைரி, 2022 பொதுத் தேர்தலின் போது கட்சிக் கட்டொழுங்கை மீறியதற்காக 2023- ஜனவரியில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ரெம்பாவ் தொகுதியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், தேர்தலுக்கு முன்பு ஜாஹித் ட்டை வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

தேர்தலில் பாகாத்தான் ஹராப்பான் கோட்டையான சுங்கை பூலோவில் போட்டியிட்ட அவர் பி.கே.ஆர்-ரின் ஆர். ரமணனிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவுக்குத் திரும்புகிறாரா Khairy? | Thisaigal News