இந்தியா, ஜூன் 04-
இந்திய நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, ஆட்சியமைக்க தேவையான இடங்களை கொண்டுள்ளது.
அதேநேரத்தில், I.N.D.I.A. கூட்டணியும் 230-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசமைக்க விரும்பினால் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் யாருடனும் கூட்டணி அமைக்காத ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 32 இடங்களில் வென்றுள்ளன.
அக்கட்சிகளை தன் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் டெல்லியில் இன்று மாலை ஆலோசனையை மேற்கொள்ளவிருக்கின்றனர். இதில், கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவிட்டால், மோடி மீண்டும் பிரதமராவதை காங்கிரசால் தடுக்க முடியாது.








