Oct 27, 2025
Thisaigal NewsYouTube
1MDB வழக்கு விசாரணை முடிந்தப் பின்னர்நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்க பரிந்துரை
அரசியல்

1MDB வழக்கு விசாரணை முடிந்தப் பின்னர்நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்க பரிந்துரை

Share:

புத்ராஜெயா, மே 15-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை முடிந்தப்பின்னர் அவரை வீட்டுக்காவலில் வைப்பது குறித்து மாமன்னர் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

தம்முடைய இந்த அறைகூவல், மாமன்னரின் அதிகாரத்தை புறந்தள்ளுவதாக பொருள்படாது. மாறாக, மாமன்னர் கேட்டுக்கொண்டால் மட்டுமே பிரதமர் என்ற முறையில் இந்த ஆலோசனையை தம்மால் முன்வைக்க முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

கட்டாருக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டு இருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், DOHA-வில் கட்டார் பொருளாதார ஆய்வரங்கில் Bloomberg செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன்பு, நஜீப்பிற்கு எதிரான தண்டனை காலத்தின் ஒரு பகுதியை மாமன்னர் குறைத்து இருப்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

வழக்கமான பிரஜைகள், தங்கள் தண்டனை காலத்தை குறைப்பதற்கு மன்னிப்பு வாரியத்திடம் விண்ணப்பிப்பது போன்று நஜீப்பின் விண்ணப்பத்தையும் பரிசீலிக்குமாறு மாமன்னருக்கு தாம் ஆலோசனை வழங்கக்கூடும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

நஜீப்பிற்கு சிறையில் உள்ள அனைத்து வசதிகளையும் தாம் ஏற்படுத்திக்கொடுத்து இருப்பதையும் பிரதமர் விளக்கினார்.

எனினும் எத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் சிறைச்சாலை, சிறைச்சாலைதான் என்று அன்வார் குறிப்பிடார்.

ஒரு முன்னாள் கைது என்ற முறையில் இவ்விவகாரம் பற்றி தமக்கு நன்கு தெரியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!