கோலாலம்பூர், டிச.13-
வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் வெள்ளப்பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
இயற்கையின் சீற்றத்தின் அடிப்படையில் ஏற்படக்கூடிய இந்த வெள்ளப்பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அதனை ஓர் அரசியல் பிரச்னையாக்க வேண்டாம் என்று ங்கோ கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.








