Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் நெருக்கடி: முந்தைய அரசாங்கமே காரணம் என்கிறார் மந்திரி புசார்
அரசியல்

நெகிரி செம்பிலான் நெருக்கடி: முந்தைய அரசாங்கமே காரணம் என்கிறார் மந்திரி புசார்

Share:

நெகிரி செம்பிலானில் தற்போது நிலவும் ஆட்சியாளர் மற்றும் மரபு பரிபாலனங்கள் தொடர்பான நெருக்கடிக்கு தற்போதைய நிர்வாகம் காரணமல்ல என்றும், இந்தப் பிரச்சினை முந்தைய அரசாங்கத்திடமிருந்து வந்தது என்றும் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

முந்தைய மந்திரி புசார், நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை முறையாக நிறைவேற்றத் தவறியதே இந்த நெருக்கடிக்கு தொடக்கமாக அமைந்ததாக அவர் கூறினார்.

குறிப்பாக, மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை நிறைவேற்ற மறுத்ததால் பிரச்சினை நீடித்து, மேலும் மோசமடைந்ததாக இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் மக்களின் ஆணையைப் பெற்றிருப்பதாகவும், அந்த ஆணையின் அடிப்படையில் நிர்வாகத்தை நிலைப்படுத்துவதும், 1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பையும் மரபு மற்றும் ஆட்சியாளர் பரிபாலனங்களின் மாண்பையும் பாதுகாப்பதும் தனது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, இந்த விவகாரம் மாநில அரசாங்கத்துக்கும் யாங் டி-பெர்துவான் பெசாருக்கும் இடையிலான மோதலாகச் சித்தரிக்கப்படுவது நிலைமையைத் தீர்க்க உதவாது என்றும் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News