முறைகேடுகள் அல்லது ஊழல்களில் ஈடுபடுவோர் மீது நிபுணத்துவ அடிப்படையிலான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாடு பாதுகாப்பாக இருக்காது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதன் காரணமாகவே, குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல், குற்றத்தின் உண்மைநிலை அடிப்படையில் அவர்கள் மீது அரச மலேசிய போலீஸ் படையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தாம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
குற்றவாளிகளையும் ஊழல்வாதிகளையும் தற்காக்கின்ற பிரதமராக இருக்க தாம் விரும்பவில்லை.
குற்றச்செயல்கள் அல்லது ஊழல்கள் குறித்த விசாரணைகள் முடிவடைய அதிக காலம் பிடிப்பதால், மக்கள் அதிருப்தி கொள்கின்றனர்.
எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்காது, நியாயத்துடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிபடுத்தவே, கால அவகாசம் பிடிப்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும், சட்ட அடிப்படையிலான குற்றக்கூறுகள் உள்ளதை உறுதிபடுத்துவதற்கு முன்னரே, அவர்களை தண்டிக்க கூடாது. ஒவ்வொரு நடவடிக்கைகளும் நிபுணத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாரவர்.
நேற்று புக்கில் ஜாலில் தேசிய விளையாட்டு மன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதளிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, அன்வார் அவ்வாறு கூறினார்.








